லண்டனில் 12 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழ் பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ
பிரித்தானியா தலைநகர் லண்டனில் 11 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத் தமிழ்ப் பெண் அம்பிகை செல்வக்குமார் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள அரசுக்கு ஆதரவான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரும் பிரித்தானிய அரசைக் கண்டித்தும், இத்தீர்மானத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் வாக்களிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தும், லண்டனில் வாழும் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் கடந்த 12 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார்.
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அம்பிகை செல்வகுமார் தனது போராட்டதை கைவிட வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தயவு செய்து இந்த போராட்டத்தை நிப்பாட்ட சொல்லி யாரும் கேட்க வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போராட்டத்தை கைவிடுமாறு தயவு செய்து யாரும் கேளாதீர்கள் அறப்போராளி #அம்பிகை_செல்வக்குமார் அம்மாவின் உருக்கமான வேண்டுகோள்! pic.twitter.com/aASrSw3Eke
— CHARLES. S. FERNANDO (@SinthathuraiC) March 10, 2021