ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி படைக்கப்போகும் புதிய சாதனை!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி ஒரு மகத்தான சாதனையை படைக்கவுள்ளார்.
சென்னை, லக்னோவிற்கு இடையேயான போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி (Mahendra singh dhoni) இதுவரை ஐபிஎல் தொடரில் 235 போட்டிகளில் விளையாடி 4992 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
@pti
இன்றைய ஆட்டத்தில் தோனி, மகத்தான சாதனையை படைக்க வெறும் 8 ஓட்டங்களே தேவைப்படுகிறது.
அப்படி அவர் இன்றைய போட்டியில் 8 ஓட்டங்கள் எடுத்தால், ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்களை அடித்த 7வது வீரர் என்ற சாதனையை தோனி எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
@ap
மேலும் 5000 ஓட்டங்களை எட்டிய வயதான வீரர் என்ற பெருமையும் தோனி பெறுவார்.
ஏற்கனவே இந்த பட்டியலில் விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஏபி டிவில்லியர்ஸ் போன்றோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கே.எல் ராகுல் படைக்கவிருக்கும் சாதனை
இதே போன்று லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுலும்(KL Rahul) ஒரு மகத்தான சாதனையை எட்டவுள்ளார்.
@afp
இன்றைய ஆட்டத்திலோ அல்லது மொத்தமாக இந்த தொடரிலோ அவர் 11 சிக்சர்கள் அடித்தால் 300 சிக்சர்களை டி20 கிரிக்கெட்டில் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
மேலும் கே.எல் ராகுல், 103 ஓட்டங்களை அடித்தால் ஐபிஎல் தொடரில் 4 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற மைல்கல்லை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
@cricbuzz
ஏற்கனவே குஜராத்திற்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வி அடைந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.