ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவீர்களா? ரசிகர் கேட்ட கேள்விக்கு தோனி கூறிய பதில்
நீங்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 2 வெற்றியையும், 2 தோல்விகளையும் அடைந்துள்ளது.
@AP Photo
CSK அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, 2023 ஐபிஎல் தான் தோனியின் கடைசி தொடர் என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர்.
தோனியின் பதில்
இந்த நிலையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் ரசிகர் ஒருவர், 'ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறீர்களா? ஓய்வுக்கான உங்கள் திட்டம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
@PTI
அதற்கு பதில் அளித்த தோனி, 'ஓய்வு குறித்து முடிவெடுக்க இன்னும் நிறைய காலம் உள்ளது. எங்களுக்கு இன்னும் நிறைய ஆட்டங்கள் உள்ளன. நான் எதாவது கூறினால் பயிற்சியாளர் (பிளெம்மிங்) அழுத்தத்தை சந்திப்பார்' என தெரிவித்தார்.
தோனியின் இந்த பதில் மூலம் அவரது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
@BCCI/IPL Photo