சென்னையில் தல தோனி! படுஉற்சாகத்தில் CSK ரசிகர்கள்
மகேந்திர சிங் டோனி சென்னைக்கு வந்தடைந்துள்ள நிலையில் ஐபிஎல் ஏலம் குறித்து முக்கிய ஆலோசனையை நடத்தவுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் திகதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.
இதற்காக டோனி சென்னை வந்துள்ளார். இதையடுத்து இன்று CSK நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைகளை டோனி நடத்தவுள்ளார். அதன்படி அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து, அதற்கான அணியை தயாரிக்கும் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டோனி அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் அதிக இளம் வீரர்களை அணியில் எடுக்க CSK திட்டம் போட்டுள்ளது. அதே நேரத்தில் முக்கியமான சீனியர் வீரர்களை அணியில் வைத்து கொள்ளவேண்டும் என்பதே டோனியின் திட்டமாக உள்ளது.
முடிந்தவரை, சென்னை அணிக்காக ஏற்கனவே விளையாடிய சீனியர்களை மீண்டும் குறிவைத்து எடுக்க டோனி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.