2022 ஐபிஎல் தொடருக்காக CSK கேப்டன் தோனி போட்ட திட்டம்! மீண்டும் கோப்பையை வெல்ல ஆயத்தம்
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள வீரர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2022 ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் கடந்த 12,13ஆம் திகதி பெங்களூருவில் நடைபெற்றது.
இதில் சிஎஸ்கே அணி 25 வீரர்களை தேர்வு செய்தது. மொத்தம் 87 கோடியே 95 லட்சம் ரூபாயை இதற்கு செலவு செய்தது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்காக ஏற்கனவே தோனி தனது பயிற்சியை தொடங்கிவிட்டார். 5வது முறையாக கோப்பையை வெல்ல தோனி தற்போது புதிய திட்டம் ஒன்றை போட்டுள்ளார். அதாவது மற்ற அணிகளை விட, 2 வாரங்களுக்கு முன்பே பயிற்சியை தொடங்கவது என்பது தான் அந்த திட்டம்.
இதற்காக சிஎஸ்கே முக்கிய வீரர்களுக்கு உடனடியாக இந்தியா வரும் படி அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அதன்படி இதில் ஒவ்வொரு வீரர்களின் திறனையும் தோனி ஆய்வு செய்து, எந்த வீரர்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ, மஹிஷ் தீக்ஷனா, டிவோன் கான்வே, கிறிஸ் ஜோர்டன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.