இப்படி கையில் விழுந்த கேட்சை விட்ட டோனி! வைரலாகும் வீடியோ: கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில், கீப்பராக டோனி கைக்கு வந்த கேட்ச்சை கோட்டை விட்டதால், அவரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், டோனியின் சென்னை அணியும், வார்னரின் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இருப்பினும் இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரரான பேர்ஸ்டோவ் கொடுத்த கேட்ச்சை டோனி விட்டார்.
Never seen Ms dhoni dropping catch #IPL2021 #CSKvSRH pic.twitter.com/EQET3EmyZi
— Sujal Bhandari (@SujalBhandari01) April 28, 2021
டோனி இது போன்ற கேட்சுகளை விடுவது மிகவும் அரிது என்பதால், இணையவாசிகள், அரிதிலும் அரிதான காட்சி என்று கலாய்த்து அந்த வீடியோவை டிரண்டாக்கி வருகின்றனர்.