இந்த இரண்டையும் என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்! ஜாம்பவான் தோனி உருக்கம்
என் மீது ரசிகர்கள் மிகவும் அன்பு செலுத்துகின்றனர் என தோனி உருக்கமாக பேசியுள்ளார்.
ஜாம்பவான் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்பவர் தோனி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளை சேர்ந்த ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த வீரராக தோனி உள்ளார்.
அவர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில், என்னை யாராவது அதிர்ஷ்டசாலி என்று சொன்னால் நான் அதை மகிழ்ச்சியாக ஏற்பேன்.
ஏனெனில் ரசிகர்கள் என் மீது எவ்வளவு அன்பு வைத்து எனக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதை அறிவேன்.
Prabhu @Cricprabhu | Twitter
பிரம்மாண்ட வரவேற்பு தந்த ரசிகர்கள்
2011 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லும் சமயத்தில் ரசிகர்கள் வந்தே மாதரம் என்ற பாடலை பாடினார்கள்.அதே போல 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்று விட்டு மும்பைக்கு வரும்போது எங்களுக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தனர்.
இந்த இரண்டு சம்பவங்களையும் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என உணர்ச்சிபூர்வமாக நெகிழ்ந்துள்ளார்.