டோனியைப் பார்க்க 1400 கி.மீற்றர் நடந்தே சென்ற ரசிகர்... இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்! வைரலாகும் புகைப்படம்
டோனியின் தீவிர ரசிகரான ஒருவர் அவரைப் பார்ப்பதற்காக, சுமார் 1400 கி.மீற்றர் நடந்த சென்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் அதிக ரசிகர்கள் கொண்ட வீரர்களின் பட்டியலில் டோனியைக் கூறலாம். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உலகம் முழுவதிலும் உண்டு.
இவர் இந்தியாவிற்கு 2007-ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார்.
டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இவரைப் பார்ப்பதற்காக டோனியின் சொந்த ஊரடான ராஞ்சிக்கு அவருடைய ரசிகர் நடந்தே சென்றுள்ளார்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Ajay Gill என்ற டோனியின் ரசிகர் Haryana-வில் இருக்கும் தன்னுடைய கிராமத்தில் இருந்து டோனி இருக்கும் ராஞ்சி வீட்டிற்கு சுமார் 1400 கி,மீற்றர் நடந்தே சென்றுள்ளார்.
கடந்த ஜுலை மாதம் 29-ஆம் திகதி கிளம்பிய இவர் இப்போது ராஞ்சியை அடைந்துள்ளார். டோனி தற்போது ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்,
ஆனால் இவரோ நான் டோனியை சந்தித்த பின்பு தான் வீடு திரும்புவேன் என்று கூறியதால், இதைப் பற்றி அறிந்த அங்கிருக்கும் அவரின் நண்பர் நேரில் சென்று அவரை சந்தித்து டெல்லிக்கு விமான டிக்கெட் ஒன்றை பதிவு செய்து கொடுத்து, பின்னர் வரும் படி அறிவுறித்தி சமாதானப்படுத்தியுள்ளார்.
அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. மேலும், 18 வயதான Ajay Gill, கிரிக்கெட் வீரராக உருவாக ஆசைப்பட்டுள்ளார். ஆனால் டோனி ஓய்வை அறிவித்த பின்பு, அவர் கிரிக்கெட் விளையாடுவதையே நிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.