பயிற்சி ஆட்டத்தின் போது சிக்சர்களை பறக்கவிட்ட தோனி! வீடியோ வைரல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பயிற்சி ஆட்டத்தின் போது சிக்சர்களை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஐபிஎல் போட்டி
உலக அளவில் மிகவும் பிரபலமான ஐ.பி.எல்(IPL) போட்டி இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனி(MS Dhoni) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
@bcci
பயிற்சியின் போது டோனி தொடர்ந்து சிக்சர்களை அடிக்கும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
வீடியோ வைரல்
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் டோனியின் ஆட்டத்தை மீண்டும் பார்க்கவிருப்பதாக கூறி கருத்துகளை தெரிவித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட அந்த வீடியோ ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
Thala Update!
— Chennai Super Kings (@ChennaiIPL) March 9, 2023
⏳: 1️⃣9️⃣ : 2️⃣9️⃣#WhistlePodu #Yellove ?? pic.twitter.com/lr5a1c3E6i
வரும் மார்ச் மாதம் 30-ஆம் திகதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் முதலாவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சேம்பியனான குஜராத் டைட்டன்ஸ்(GT) அணியும் மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டிகளை காண ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
உலக அளவில் சிறந்த வீரராக அறியப்பட்ட மகேந்திர சிங் டோனி ஐ.பி.எல் துவங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
@afp