லண்டனில் தோனியை துரத்திய ரசிகர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் லண்டன் தெருவில் நடந்து செல்வதைக் கண்டதும், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு துரத்தும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கேப்டன்கள் சவுரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ளனர்.
வியாழக்கிழமை லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இந்தியாவின் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் முன்னாள் வீரர்கள் இருந்தனர்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது, கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
2007-2016க்கு இடையில் இந்தியாவை வழிநடத்திய தோனி, ஜூலை 7-ஆம் திகதி தனது பிறந்தநாளுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்தார், மேலும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் T20I தொடரின் போட்டியிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இன்று தோனியின் ரசிகர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் அவர் லண்டன் தெருக்களில் நடந்து செல்வதைக் காண முடிகிறது. ஏராளமான இந்திய ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர். அவர் வேகமாக அழைத்துச்செல்லப்பட ரசிகர்கள் சிலர் வேகமாக ஒட்டியபடி செல்ஃபியை கேட்டுக்கொண்டனர்.
. @MSDhoni in the streets of london ??pic.twitter.com/aLEurgsClH
— Dhoni Army TN™? (@DhoniArmyTN) July 16, 2022
MS Dhoni Walking On The Street Of The London. Crazy Fans Are Chanting Dhoni Dhoni Behind Him.#ENGvIND #msdhoni #dhoni #thala @msdhoni @ChennaiIPL pic.twitter.com/AfubZcJkuN
— Paritosh Ghosh (@MSDianPARITOSH) July 15, 2022
எம்.எஸ். தோனி 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனால் இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்த ஆண்டு நடந்து நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் CSK அணியின் இறுதி ஆட்டத்தின் போது, அடுத்த சீசனிலும் அவர் இருப்பார் என்பதை தோனி உறுதிப்படுத்தினார்.
IPL 2023 போட்டி நாடு முழுவதும் விளையாடப்படும் என்று நம்புவதாகவும், மேலும் சென்னை ரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.