வலியால் துடிக்கும் தோனி... - ஆர்சிபி அணிக்கு எதிராக களமிறங்குவதில் சந்தேகம்?
முழங்கால் வலியால் அவதியுறும் தோனி, ஆர்சிபி அணிக்கு எதிராக களமிறங்குவரா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தோனி களமிறங்குவதில் சந்தேகம்?
சிஎஸ்கேவின் முன்னணி வீரர் தீபக் சஹர் 2 போட்டிகளில் கூட முழுமையாக ஆடாமல் காயமடைந்திருக்கிறார். மேலும் மிடில் ஆர்டர் துப்பாட்டத்தில் உதவுவார் என்று மினி ஏலத்தில் ரூ.16.25 கோடி கொடுத்து வாங்கப்பட்ட ஸ்டோக்ஸ் ஆட்டத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருக்கிறார்.
சிஎஸ்கே கேப்டன் தோனியும் முழங்காலில் காயத்தால் அவதியடைந்து வருகிறார். சிஎஸ்கே அணியில் முன்னணி வீரர்கள் காயத்தால், பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
மேலும், ஏப்ரல் 17ம் திகதி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவது சந்தேகம் என்ற தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்
இது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் பேசுகையில்,
சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அடுத்த போட்டியில் களமிறங்காமல் ஓய்வெடுப்பது குறித்து தோனி இதுவரை எதுவும் சொல்லவில்லை.
அதனால் ரசிகர்கள் கவலை அடைய வேண்டாம். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் இன்னும் 2 வாரங்களில் குணமடைந்து திரும்பி வருகிறார். அதனால் ஏப்ரல் 27ம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலோ அல்லது ஏப்ரல் 30ம் நடக்கவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலோ களமிறக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதேபோல் தீபக் சஹர் மே மாதம் முதல் வாரத்தில் குணமடைந்துவிடுவார். அதனால் சென்னை அணி ரசிகர்கள் கவலைப்பட தேவை இல்லை என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.