இப்படி வச்சு... அப்படி அடிக்கணும்.. பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக்கொடுத்த தோனி
பிராவோவுக்கு விசில் அடிக்க எம்.எஸ். தோனி கற்றுக்கொடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -
டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில், வரும் 31ம் தேதி ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது.
அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
விசில் அடிக்க கற்றுக்கொடுத்த தோனி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ். தோனி பந்து வீச்சு பயிற்சியாளரான பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக் கொடுக்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
Next up: Whistles Paraak! ?#SummerIsHere @TheIndiaCements@msdhoni @DJBravo47 pic.twitter.com/Nl1oxCbAKj
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2023