தொடர்ந்து முன் வரிசையில் களமிறங்காத தோனி - என்ன காரணம்? வெளியான தகவல்!
தோனி முன் வரிசையில் களமிறங்காததற்கு காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் அணி வெற்றி
ஐ.பி.எல். தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இப்போட்டியில் முதலில் துப்பாட்டம் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சென்னை அணி களத்தில் இறங்கியது. இப்போட்டியின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 172 ஓட்டங்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
முன் வரிசையில் களமிறங்காத தோனி
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அவர் ஏன் தொடர்ந்து கீழ் வரிசையில் களமிறங்குகிறார் என்ற கேள்வி தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்திலும் சிஎஸ்கே அணியின் நடுவரிசை வீரர்கள் தடுமாறியபோதும் தோனி 8-வது வீரராக தான் களமிறங்கினார். தோனிக்கு காலில் ஏற்கனவே பிரச்சினை இருந்து வருகிறது.
இதனால், அவரால் முன்பு போல் வேகமாக ஓட்டங்கள் ஓட முடியவில்லை. இதனால்தான் நடுவரிசையில் விளையாட நேர்ந்தால் ஓடி போய் ஓட்டங்கள் எடுக்க வேண்டும். இதுவே பழைய தோனி என்றால் ஒவ்வொரு பந்துக்கும் 2 ஓட்டங்கள் ஓடி அசால்டாக ஓட்டங்கள் எடுப்பார்.
ஆனால், காலில் காயம் இருப்பதால் அவரால் ஓட முடியவில்லை.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கூட தோனி ஓட்டங்கள் ஓடும்போது அவருடைய வேகம் குறைவாக இருந்ததை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ரவி சாஸ்திரியும் , ஹைடனும் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.