என் பலம், என் நோக்கம் இது தான்! மனம் திறந்த தோனி
என் பலம், என் நோக்கம் இது தான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
அதிர்ச்சி தோல்வி அடைந்த சிஎஸ்கே
ஐ.பி.எல். தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இப்போட்டியில் முதலில் துப்பாட்டம் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சென்னை அணி களத்தில் இறங்கியது. இப்போட்டியின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 172 ஓட்டங்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
மனம் திறந்த தோனி
தற்போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பேசுகையில்,
'பவுலர் தவறு செய்யும்போது பேட்டர் காத்திருந்து அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வித்தியாசமான ஷாட்கள் ஆடுவது என் பலமல்ல. நேராக பந்தை அடிப்பதுதான் என் பலம். அதற்காக காத்திருந்தேன்.
ஆனால், இப்போது வெற்றி பெற்றது பவுலர்தான். ஒரு வீரராக சாதனைகளை விட அணிக்காக சிறந்த பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம்' என்று தெரிவித்துள்ளார்.