Tagda Raho நிறுவனத்தில் முதலீடு செய்த MS தோனி
பெங்களூருவை தளமாகக் கொண்ட ஃபிட்னஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான டக்டா ரஹோ-வில் (Tagda Raho) கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலீடு செய்துள்ளார்.
தொழிலதிபாராக மாறிய தோனி
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு தன்னுடைய ஃபிட்னஸ் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தோனி கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து பல சிகிச்சைகள் மேற்கொண்ட தோனி, சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் மூலம் அவர் ஃபிட்டாக இருப்பது உறுதியானது. இதனிடையே, தோனி ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பது மட்டுமட்டாமல் தொழிலதிபராகவும் உருவெடுத்துள்ளார்.
இவர் திரைப்படம் தயாரிப்பது, பள்ளிகளை திறப்பது, ஸ்டார்ட்அப் முதலீடு, பிராண்ட் என்டோர்ஸ்மென்ட் வரை பணத்தை முதலீடு செய்துள்ளார்.
Tagda Raho வில் முதலீடு
பெங்களூருவை தளமாகக் கொண்ட ஃபிட்னஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம் டக்டா ரஹோ-(Tagda Raho) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் ரிஷப் மல்ஹோத்ரா.
இவர், கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடற்தகுதியினை மேம்படுத்துவது போல, சாதாரண மக்களும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை ரிஷப் மல்ஹோத்ரா கொண்டுள்ளார். இதில் தோனி இம்ப்ரெஸ் ஆனதாக கூறப்படுகிறது.
மேலும், பாரம்பரிய உபகரணங்களை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பயன்படுத்தும் முறையை தக்தா ரஹோ பின்பற்றுவதால் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலீடு செய்துள்ளார். ஆனால், தோனி எவ்வளவு முதலீடு செய்துள்ளார், எவ்வளவு பங்குகளை வாங்கியுள்ளார் என்ற விவரம் சரியாக தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |