ஐபிஎல் பயிற்சியை தொடங்கிய தோனி! வெளியான வீடியோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்
ஐபிஎல் போட்டிகளுக்கான பேட்டிங் பயிற்சியில் தோனி ஈடுபடும் வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தல தோனி
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் - ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், இதுவே தோனியின் கடைசி ஐபிஎல்லாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல்லிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன், 5 முறையாக சென்னை அணிக்கு கோப்பையை வென்று தரும் நோக்கில் தோனி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
MSD in practise nets just before IPL.
— Venkatramanan (@VenkatRamanan_) January 19, 2023
pic.twitter.com/Q18U5066wk
பயிற்சி வீடியோ
இந்த நிலையில் 2023 ஐபிஎல் போட்டியைக் கருத்தில் கொண்டு, அதற்கான பயிற்சியை தோனி இப்போதே தொடங்கிவிட்டார்.
ஜார்கண்ட்டில் உள்ள மைதானத்தில் அவர் பயிற்சியில் ஈடுபடும் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களில் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை, இந்த முறை அவர் நிச்சயம் பேட்டிங்கில் விளாசுவார் என ரசிகர்கள் பெரிதும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.