ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்த மகேந்திர சிங் தோனி!

MS Dhoni Board of Control for Cricket in India International Cricket Council
By Thiru Jun 10, 2025 03:06 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்துள்ளார்.

ICC Hall of Fame

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, உயரிய ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்(ICC Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லண்டனில் திங்கட்கிழமை (ஜூன் 9) நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்த மகேந்திர சிங் தோனி! | Ms Dhoni Joins Elite Company In Icc Hall Of Fame

இந்த ஆண்டு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஏழு புதியவர்களில் தோனியும் ஒருவர். இவருடன் ஐந்து ஆண் கிரிக்கெட் வீரர்களும், இரண்டு பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர்.

இதன் மூலம், ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் உள்ள கிரிக்கெட் பிரபலங்களின் மொத்த எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, இந்தப் பெருமைமிக்க அங்கீகாரத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை தோனி பெற்றுள்ளார்.

தனது அசாதாரண தலைமைத்துவத்திற்கும், அமைதியான அணுகுமுறைக்கும் பெயர் பெற்ற தோனி, 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்த மகேந்திர சிங் தோனி! | Ms Dhoni Joins Elite Company In Icc Hall Of Fame

அவரது தலைமையின் கீழ் இந்திய அணி 2007 இல் நடைபெற்ற முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரிலும், 2011 இல் புகழ்பெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும், 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சாம்பியன் பட்டம் வெல்ல வழிநடத்தினார்.

தோனி சாதனைகள்

தனது சிறப்பான கிரிக்கெட் பயணத்தில், தோனி 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 50.57 சராசரியுடன் 10,773 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 10 சதங்களும், 73 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 போட்டிகளில் விளையாடி 4,876 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்த மகேந்திர சிங் தோனி! | Ms Dhoni Joins Elite Company In Icc Hall Of Fame

தோனி கடைசியாக 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டம் தான் அவர் கடைசியாக விளையாடிய போட்டியாகும். அவர் ஆகஸ்ட் 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்பது கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை அளித்த ஜாம்பவான்களின் மகத்தான சாதனைகள் மற்றும் நீண்டகால தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரு கௌரவமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US