2025 IPL : மெகா ஏலத்திற்கு முன் ஜாம்பவான் தோனியின் புதிய தோற்றம்..!
IPL 2025 இற்கான மெகா ஏலத்திற்கு முன், சென்னை சூப்பர் அணியின் மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைலாகி வருகின்றது.
தோனியின் புதிய தோற்றம்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி தனது நீண்ட தலைமுடிக்கு இறுதி வணக்கம் சொல்லிவிட்டு, தற்போது புதிய அலங்காரத்துடன் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
இவரின் இந்த புதிய தோற்றத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ஜாம்பவான் எம்எஸ் தோனியின் இந்த புதிய தோற்றத்தின் புகைப்படங்களை சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
2024 IPL சீசனில் 2007 டி20 உலகக் கோப்பையில் இருந்து தோனி தனது நீண்ட கூந்தல் தோற்றத்தை ஏற்றுக்கொண்டார். இந்த தோற்றத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர்.
இப்போது வரவிருக்கும் IPL சீசனின் மெகா ஏலத்தில் இருந்து தோனியின் சமீபத்திய தோற்றம் மீண்டும் பேச்சுப்பொருளாகி வருகின்றது.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2025 கடைசி சீசனாக இருக்குமா?
IPL 2025 தோனியின் கடைசி சீசனாக இருக்குமா என்பதுதான் ரசிகர்களின் மனதில் உள்ள பெரிய கேள்வி.
IPL 2024 இன் முடிவில் எம்எஸ் தோனி ஓய்வு பெறுவார் என்ற ஊகங்கள் இருந்தன. இருப்பினும் அது தொடர்பான எந்தவொரு முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.
இந்த ஆண்டு IPL தொடரில் தோனி தனது அதிரடியான பேட்டிங் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார்.
மீண்டும் ஒருமுறை அவரிடமிருந்து இப்படியொரு ஆட்டத்தை காண வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தோனியின் ஐபிஎல் சீசன் கடைசியாக இருக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி புதிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |