அசரவைக்கும் தோனியின் புதிய தோற்றம்: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ துணுக்குகள்!
இந்தியாவில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்தாண்டு ஒளிபரப்பாக இருக்கும் IPLலின் 15வது சீசன் தொடர்பான விளம்பரத்தில் தோன்றியுள்ள தோனியின் புதிய தோற்றம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஐபிஎல் அணிகளுக்கான வீரர்கள் தேர்வு பிப்ரவரி 12 மற்றும் 13 திகதிகளில் நடைப்பெற்று முடிந்துள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான IPL போட்டிகள் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.
Cue the ???, 'cause he is ? in a new avatar!
— Star Sports (@StarSportsIndia) February 26, 2022
How did you react to #DhonisNewLook? Let us know with an emoji! pic.twitter.com/Kv6qMr6iz5
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை நேரலையில் வழங்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம், ஐபிஎல் போட்டிகள் குறித்த விளம்பரத்தில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியை வைத்து படமாக்கி சில விளம்பர துணுக்கு காட்சிகளை வெளியிட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா பட ஆட்டோக்காரன் கெட்-அப்பில் தோனி தோன்றிய ரசிகர்கள் கவர்ந்துள்ளார்.
முழுநீள விளம்பரம் இன்னும் வெளிவராத நிலையிலும், தோனியின் இந்த ஆட்டோக்காரன் கெட்-அப்பை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்று அதை இணையத்தில் வேகமாக பரப்பிவருகின்றனர்.
Stay Tuned#DhonisNewLook #ComingSoon pic.twitter.com/S17D8L7JPD
— Star Sports (@StarSportsIndia) February 26, 2022