புதிதாக தோனி வாங்கிய அணி இதுதான்! கோடிகளை கொட்டிய பிரபல நிறுவனம்
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிட்ரோன்((Citroen) இந்தியாவின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பற்றிய செய்தி வெளியானதுமே, தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.
சிட்ரோன் நிறுவனம் பற்றி தெரியுமா?
சிட்ரோன் என்பது பிரான்ஸைச் சேர்ந்த ஒரு பிரபலமான வாகன உற்பத்தி நிறுவனம். இது 1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
தோனி சிட்ரோனுடன் இணைந்ததற்கான காரணம் என்ன?
தோனி ஒரு ஆர்வமுள்ள வாகன பிரியர். அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று பைக் மற்றும் கார் ஓட்டுவது. தோனியிடம் ஏற்கனவே பல வாகனங்கள் உள்ளன.
சிட்ரோனுடன் தோனி இணைந்ததன் மூலம், இந்தியாவில் சிட்ரோன் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனியின் பிரபலம் மற்றும் செல்வாக்கு சிட்ரோன் பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்க உதவும்.
தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா?
தோனிக்கு 42 வயது ஆகிறது. காயங்களால் அவதிப்பட்டு வரும் அவர், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கடைசி ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்தார். இதனால், அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவது சந்தேகமாக உள்ளது.
இந்நிலையில், தோனியின் பேஸ்புக் பதிவு ரசிகர்களை குழப்பியது. தனது பேஸ்புக் பக்கத்தில், "அடுத்த கட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது. எது முக்கியமோ அதை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. நான் எனது சொந்த அணியை உருவாக்க போகிறேன்" என்று தோனி குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, வேறொரு ஐபிஎல் அணியை வாங்க திட்டமிட்டு வருகிறாரா அல்லது ஏதேனும் ஒரு அணிக்கு பயிற்சியாளராக மாற போகிறாரா என்று கேள்வி எழுப்பினர்.
ஆனால், தோனி சிட்ரோன் நிறுவனத்தை டேக் செய்திருந்ததை பலர் கவனிக்கவில்லை.
தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சிட்ரோனுடன் இணைந்ததன் மூலம், அவர் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளார் என்பது உறுதி.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |