இரட்டை அர்த்தத்தில் பேசிய தோனி! ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய வீடியோ
இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் தோனி பேசிய ஒரு வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரிடம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த சிறந்த பரிசு எது என்று மந்திரா பேடி கேட்க, அதற்கு தோனி பதில் அளிக்காமல் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது மந்திரா பேடி நான் வேண்டுமென்றால் உங்களுக்கு விடை தருகிறேன் அது உங்கள் மகள் என்று சைகையில் கூறினார்.
Thug Life - @msdhoni ?? pic.twitter.com/Ux6gS5XsGi
— DIPTI MSDIAN (@Diptiranjan_7) October 4, 2022
இதற்கு உடனே தோனி, மகள் என்பது பரிசு கிடையாது. அது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. பரிசு என்றால் மற்றொருவர் நமக்கு கொடுப்பது என்று வித்தியாசமாக பதில் அளித்தார்.
தோனியின் இந்த பதில் இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக கூறி ரசிகர்கள் நகைச்சுவையில் சிரித்து வருகின்றனர்.