உலகக்கோப்பையில் பாகிஸ்தான் ஜெயிக்கும்... நாங்கள் தோல்வியை சந்திக்கலாம்.. முன்னரே கணித்து சொன்ன டோனியின் வீடியோ
2016 டி20 உலகக்கோப்பையின்போது பாகிஸ்தான் அணியைப் பற்றி டோனி பேசிய ஒரு கருத்து தற்போது வைரலாகியுள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. 29 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை தொடரில், இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி இருக்கிறது.
2016 டி-20 உலகக்கோப்பையின்போது பாகிஸ்தான் அணியைப் பற்றி டோனி தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அந்த நாஸ்டால்ஜிக் வீடியோதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்போதைக்கு மிக தேவையான ஒன்றாக இருக்கின்றது.
"It is a reality that we will lose at some point of time, if it's not today then it will be after 10 / 20 or 50 years. We can't always keep winning." - @msdhoni ❤️ #Sportsmanship #Mentor pic.twitter.com/xXwhw7M09F
— Yazhini PM (@yazhini_pm) October 24, 2021
2016 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்போதைய இந்திய அணி கேப்டன் டோனி, ஒரு நாள் நாங்களும் தோல்வியை சந்திக்க நேரிடும். இன்றைக்கு இல்லையென்றாலும், 10 அல்லது 20 அல்லது 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு தோல்வி உண்டாகும்.
எப்போதும் வெற்றி பெற்று கொண்டே இருக்க முடியாது என தெரிவித்திருந்தார்.
டோனியின் இந்த பழைய வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் பலரும் கிரிக்கெட் மற்றும் விளையாட்டின் மீதான பார்வையை, வெற்றி தோல்வி குறித்த நிதர்சனத்தை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.