காதலிக்காக தலைமுடியை வெட்டி ரசிகர்களுக்கு ஷாக் தந்த தோனி! வாழ்க்கையில் வந்த 4 பெண்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. தோனிக்கு சாக்ஷிக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது.
இதற்கு முன்னர் அவர் சில பிரபலமான பெண்களிடம் காதலில் விழுந்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
நடிகை ராய் லட்சுமி
தமிழ் திரையுலகில் பிரபலமாக இருப்பவர் ராய் லட்சுமி. சிஎஸ்கேவுக்காக ஆடத் தொடங்கிய போது ராய் லட்சுமிக்கும், தோனிக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. சென்னைக்கு தோனி வந்தால் ராய் லட்சுமி இல்லாமல் தோனியை தனியாக பார்க்க முடியாது. அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமாக இருந்தனர். ஆனால் என்ன காரணமோ, அவர்கள் காதல் பிரிந்தது.
news18
அசின்
தமிழ் திரைப்பட நடிகை அசினும், தோனியும் உயிருக்கு உயிராக காதலித்ததாக செய்திகள் வெளியாகின,. இந்தி கஜினிக்கு பிறகு அசின் தேசிய அளவில் பிரபலமான போது தோனிக்கும், அசினுக்கும் காதல் மலர்ந்தது.
அவ்வளவு ஏன், அசின் வீட்டுக்கு அவர்கள் பெற்றோர்கள் இருக்கும் போது தோனி அடிக்கடி விசிட் அடித்து நல்ல ஒரு உறவை பேணி வந்தார். ஆனால் என்ன நடந்ததோ அந்த காதலும் கைக்கூடவில்லை.
தீபிகா படுகோன்
2007ம் ஆண்டு தோனி மற்றும் தீபிகா படுகோனே இடையேயான கிசுகிசு காட்டுத்தீ போல எரிந்தது என்றே கூறலாம். ஏறத்தாழ எல்லா செய்திகளிலும் இவர்களை பற்றி பேசி இருந்தனர். தோனியும் தீபிகா மீது க்ரஷ் இருந்தது குறித்து ஒருமுறை பேசி இருந்தார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 போட்டியை காண தோனி தீபிகாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், காதல், கீதல் என்று தங்கள் இடையே எதுவும் இல்லை என்று இருவரும் மறுப்பு தெரிவித்தனர்.
அதே நேரத்தில் தீபிகா சொன்னதால் ஆசை ஆசையாக வளர்த்து வந்த தலைமுடியை தோனி நீக்கி ரசிகர்களுக்கு அப்போது அதிர்ச்சி அளித்தார் எனவும் கூறப்பட்டது.
ப்ரீத்தி சிமோஸ்
தொலைக்காட்சி நடிகை மற்றும் காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சியின் முன்னாள் கிரியேட்டிவ் இயக்குனர் ஆவார். தோனியும், ப்ரீத்தி சிமோஸும் டேட் செய்து வந்ததாக கூட அச்சமயம் கிசுகிசு வெளியாகி இருந்தன.
thecricketlounge