முடிந்தவரை முயற்சிப்போம், இல்லையெனில் அடுத்த ஆண்டு: தோல்வி குறித்து பேசிய தோனி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டுக்கு சரியான அணியை உருவாக்குவதுதான் முக்கியம் என தெரிவித்தார்.
CSK தோல்வி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸிடம் படுதோல்வியுற்றது.
இதனால் அடுத்த 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஃப்ளே சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனாலும், ஏனைய அணிகளின் முடிவுகளை பொறுத்தே செல்ல முடியும்.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய CSK அணித்தலைவர் எம்.எஸ்.தோனி,
"நாங்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இரண்டாம் பாதியில் பனி விழும் என்பது எங்களுக்குத் தெரியும்.
மேலும், நாங்கள் மிடில் ஓவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் இருந்தோம். அவர்கள் டெத் பந்துவீச்சை தொடங்கியவுடன் நாங்கள் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, எங்கள் Slogஐ சற்று சீக்கிரமாகத் தொடங்கியிருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன்.
2020 எங்களுக்கு சிறப்பாக இல்லை என்று நான் நினைக்கும் சீசன்களில் ஒன்று. ஆனால் நாம் சரியான வடிவிலான கிரிக்கெட்டை விளையாடுகிறோமா, நாம் நம்மை நாமே பயன்படுத்துகிறோமா என்பதைப் பார்க்க வேண்டும்.
நாங்கள் வெற்றி பெற வேண்டிய அனைத்து ஆட்டங்களிலும், ஒவ்வொரு ஆட்டமாக மட்டுமே விளையாட முயற்சிக்கிறோம். ஒரு சில ஆட்டங்களில் தோற்றால், அடுத்த ஆண்டுக்கு சரியான அணியை உருவாக்குவதுதான் எங்களுக்கு முக்கியம்.
அதிக வீரர்கள் மாற்றப்படுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள், முடிந்தளவு முயற்சித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முயற்சிப்பதுதான் முக்கியம். முடியாவிட்டால், சிறந்த 11 வீரர்களை அமைத்து அடுத்த ஆண்டு வலுவாக திரும்பி வருவோம்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |