விராட் கோஹ்லி அந்த பசி உள்ளது: எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி, பெங்களூரு வீரர் விராட் கோஹ்லி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
தோனி
விராட் கோஹ்லி நடப்பு ஐபிஎல் தொடரில் 4 அணிகளுக்கு எதிராக 1000 ஓட்டங்கள் குவித்த ஒரே வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
ஆரம்ப காலம் முதல் கோஹ்லி ஆதரவு அளித்து வரும் தோனி, தற்போது தங்கள் இருவருக்குமான உறவு குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "நான் உறவை பற்றி பேசுவேன். ஆனால், அந்த மெசேஜை பற்றி அல்ல. அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். அது மற்ற வீரர்கள் என்னிடம் வந்து ஆலோசனை கேட்க அனுமதிக்கிறது. என்னிடம் சொல்வது வெளியே வராது. அதை வேறு யாரும் அறிய மாட்டார் என்று அவர்கள் நம்புகின்றனர்.
அதுபோன்ற நம்பிக்கை முக்கியம். எனவே, நான் அதை அப்படியே வைத்திருக்கிறேன். நானும் விராட்டும் ஆரம்பத்தில் இருந்தே வெற்றியில் பங்காற்ற விரும்புபவர்கள்.
அவர் 40-60 ஓட்டங்களில் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார். சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க விரும்புவார்.
அந்த பசி ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் உள்ளது. அவர் தனது துடுப்பாட்டத்தை விரைவாக மேம்படுத்திக் கொண்டார். மேலும் சிறப்பாக செயல்படவும், ஓட்டங்கள் குவிக்கவும் வேண்டும் என்ற விருப்பமே அவரைத் தொடர்ந்து வழி நடத்தியது" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |