சிக்ஸர்களை பறக்கவிடும் டோனி! ஐபிஎல் பயிற்சியை துவங்கிய டோனி: வெளியான வீடியோ
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் டோனி சிக்ஸர்களை பறக்கவிடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக ஐபிஎல் அணி வீரர்கள் பலரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது சென்னை அணி வீரர்கள் பயிற்ச்சி மேற்கொண்டு வரும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், சென்னை அணியின் தலைவரான டோனி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிடுகிறார். அதுமட்டுமின்றி பயிற்சி முடிந்த பின்பு அணியில் இருந்த சக உறுப்பினர் ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டமும் நடந்துள்ளது.
இதில் முதல் ஆளாக கேக்கை சுவைத்து பார்த்த டோனி, கேக் சுவை அருமையாக இருக்கிறது என்ற வீடியோவை சென்னை அணி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.