ஓய்வு பெற போகிறாரா மகேந்திர சிங் டோனி! சேப்பாக்கம் மைதானத்தில் CSK ரசிகர்களுக்கு நன்றி: வைரல் வீடியோ
ஐபிஎல் போட்டிகளிலிருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், சேப்பாக்கத்தின் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் கடைசி லீக் போட்டி
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் , சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதியது, இப்போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், போட்டியின் முடிவில் மைதானத்தில் சென்னை அணி சார்பாக, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற போட்டி முடிவுக்கு வந்தவுடன் ரசிகர்களுக்கு மகேந்திர சிங் டோனி நன்றி தெரிவித்தார்.
ஓய்வு பெற போகிறாரா டோனி
இதனை தொடர்ந்து போட்டியின் முடிவில் மகேந்திர சிங் டோனி, மைதானத்தை சுற்றி நடந்து கொண்டே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டீசர்டுகளை ரசிகர்களை நோக்கி வீசினார்.
???????! ?
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
A special lap of honour filled with memorable moments ft. @msdhoni & Co. and the ever-so-energetic Chepauk crowd ?#TATAIPL | #CSKvKKR | @ChennaiIPL pic.twitter.com/yHntEpuHNg
மேலும் ’எல்லோருக்கும் நன்றி’ என்ற வாசகத்துடன் அவரை பின் தொடர்ந்து வந்த சென்னை அணி வீரர்கள் கொடி அசைத்தும், டென்னிஸ் பந்துகளை ரசிகர்கள் மீது வீசியும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், அங்கு வந்து டோனியிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து மகேந்திர சிங் டோனியின் ரசிகர்கள் அனைவரும், சமூக வலைத்தளத்தில் டோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுகிறாரா என கேள்வி எழுப்பு வருகின்றனர்.
MS Dhoni thanking the whole Chepauk crowd by putting the knee cap.
— Johns. (@CricCrazyJohns) May 14, 2023
Captain, Leader, Legend, Mahi. pic.twitter.com/LZhcOec5th