தோனிக்கு இது தெரியாது! புகழந்து தள்ளிய ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் இந்திய வீரர் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
2021 டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகினார்.
ரவி சாஸ்திரிக்கு பதிலாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி, தோனி ஒரு விசித்திரமானவர், அவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்ல என புகழ்ந்துள்ளார்.
டெண்டுல்கர் உட்பட பல வீரர்களை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் தோனி போன்ற ஒரு வீரரை நான் கண்டதில்லை.
சச்சின் அற்புதமான குணம் கொண்டவர், ஆனால் கோபப்படுவார். தோனிக்கு கோபப்படவே தெரியாது என ரவி சாஸ்திரி புகழ்ந்துள்ளார்.