அஸ்வினின் அந்த செயலைக் கண்டு டோனியே திட்டினார்! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த சேவாக்: வைரலாகும் புகைப்படம்
இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், கடந்த 2014-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், கடந்த 28-ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மோர்கன் மற்றும் அஸ்வின் மோதிக் கொண்ட விஷயம் பெரும் சர்ச்சையானது. அதன் பின் இது குறித்து எந்த ஒரு பேச்சும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் ஸ்பிரிட் ஆப் தி கேம் என்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.
அப்போது அவர் கடந்த 2014- ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ஆனால் இது சரியான தேதி தெரியவில்லை, அதே சமயம் இது குவாலியபர் போட்டி என்று தான் நினைப்பதாக கூறினார்.
நான் அப்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறேன். அந்த போட்டியில் மேக்ஸ்வேல்லை அவுட் ஆக்கிய பின்பு அஸ்வின் அதை ஒரு தூசியை எடுத்து தட்டுவது போன்று கொண்டாடினார்.
அப்போது மைதானத்தில் இருந்த எனக்கு இது பிடிக்கவில்லை, இது விளையாட்டிற்கு எதிரானது என்று தான் நான் கூறுவேன், அவர் அப்படி செய்திருக்க கூடாது, இருப்பினும் டோனி அப்போது அவர் மீது கோபப்பட்டு திட்டியதாக குறிப்பிட்டார்.
இதைக் கண்ட ரசிகர்கள் அஸ்வின் அன்று மேக்ஸ்வேல்லை அவுட் ஆக்கிய பின் செய்த செயலின் புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.