அடுத்த சீசனிலும் சென்னை அணிக்கு கேப்டன் தோனி தான்! வெளியான அதிரடி அறிவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது
எம்.எஸ் தோனி 234 ஐபிஎல் போட்டிகளில் 4978 ஓட்டங்கள் குவித்துள்ளார்
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியே கேப்டனாக நீடிப்பார் என சிஇஓ காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் ஐ.பி.எல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
அடுத்த ஐ.பி.எல் சீசனில் தோனி விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையில் நிலவி வந்தது. அதனை தெளிவு செய்யும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ பேட்டியளித்துள்ளார்.
PC: Google
தமிழகத்தில் நடைபெற்ற கிரிக்கெட் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட CSK அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில், 'தமிழ்நாடு வீரர்கள் குறைவாக இந்திய அணியில் ஆடுகிறார்கள் என்று இப்போதைக்கு கூற முடியாது. டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மற்றும் விஜய் இருக்கிறார்கள்.
ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் கார்த்திக் அஸ்வின் இருக்கிறார்கள். அடுத்து சாய் கிஷோர் ஆடவிருக்கிறார். நிறைய தமிழக வீரர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
PC: IPL
அடுத்த ஐ.பி.எல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார். அதேபோன்று அணியின் கேப்டனாகவும் அவர் நீடிப்பார்' என தெரிவித்தார்.
மேலும் அவர் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இருந்து 13 வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதாக குறிப்பிட்டார்.