பொறுமையை இழந்து சக வீரரிடம் கத்திய தோனி! கேப்டன் கூலா இப்படி என முகம் சுளித்த ரசிகர்கள்
ஐபிஎல் போட்டியின் முக்கிய கட்டத்தில் பொறுமையை இழந்த தோனி ஆவேசமாக கத்தியது ரசிகர்களிடையே விவாதமாக மாறியுள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. போட்டியின் போது கூல் கேப்டன் என பெயரெடுத்த தோனி ஆவேசமாக கத்தியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி போட்டியின் கடைசி ஓவரில் சன் ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரை வீச முகேஷ் சவுத்ரி வந்தார்.
சாதாரணமாக பந்து வீசினாலே இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் நிக்கோலஸ் பூரானுக்கு எதிராக லெக் சைடில் ஒரு பந்தினை முகேஷ் வீசினார்.
அந்த பந்து வொயிடாக செல்லவே அதனால் ஆவேசமடைந்த தோனி பீல்டர்களை நான் ஆப் சைடில் நிறுத்தி வைத்திருக்கிறேன். நீ எந்த திசையில் வீசுகிறாய் என்பது போல கத்தினார்.
நீயாக ஒரு முடிவை எடுத்துக்கொள்வதா என களத்திலேயே முகேஷை தோனி கடுமையாக திட்டினார். தோனியின் வார்த்தைகளால் அவரின் முகம் சுருங்கியது, இது ரசிகர்களுக்கே வருத்தத்தை கொடுத்துள்ளது.