பெரிய தப்பு செஞ்சுட்டீங்க தோனி! இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே என விமர்சிக்கும் CSK ரசிகர்கள்
ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் கேட்ட வீரர்கள் பலரும் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகள் கடந்த 26ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இதற்கு காரணம் சரியான வீரர்கள் அமையாது இருப்பதால் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி கேட்டு கிடைக்காமல் வேறு அணிக்கு சென்ற வீரர்கள் பலரும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
மும்பை அணிக்காக விளையாடி வருபவர் திலக் வர்மா. சிஎஸ்கே ஏலம் கேட்ட இந்த இளம் வீரர், தனது முதல் போட்டியில் 15 பந்துகளில் 22 ரன்களை விளாசினார்.
2வது போட்டியில் 33 பந்துகளில் 61 ரன்களை குவித்து அசத்தினார். லக்னோ அணிக்காக அசத்தலாக ஆடி வரும் தீபக் ஹூடாவை சிஎஸ்கே அணி தான் முதலில் கேட்டது.
3வது வீரராக இருப்பவர் ராகுல் திரிபாதி தான். இவரை ஏலம் எடுக்க ரூ.8.25 கோடி வரை செலவளிக்க கடும் போட்டி போட்டது. இறுதியில் ஐதராபாத் அணி 8.50 கோடிக்கு வாங்கியது.
இந்நிலையில் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் திரிபாதி 30 பந்துகளில் 44 ரன்களை குவித்துள்ளார். இப்படி தோனி ஸ்கெட்ச் போட்ட அனைத்து வீரர்களும் இன்று சிறப்பாக செயல்படுகின்றனர்.
இதனால் தோனி நன்றாக விளையாடும் வீரர்களை எடுக்க தவறிவிட்டார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.