சென்னைக்கு மீண்டும் வரும் டபுள் டக்கர் பேருந்துகள் - எந்த வழித்தடத்தில் இயங்கும்?
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
டபுள் டக்கர் பேருந்துகள்
சென்னையில் 1980 முதல் 2008 ஆம் ஆண்டு வரை டபுள் டக்கர் எனப்படும் இரட்டை மாடி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.
அதன் பின்னர், மேம்பால கட்டுமானம் போன்ற பணிகளால் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது.
#381st Madras Day Celebrations!🎊🥳💐🎇🎉
— TNSTC Enthusiasts (@tnstcbus) August 22, 2020
Celebrating Madras - Chennai!🎉❤️#Reshared🖼️
🚌 Double Decker Bus
🚍MTC #Chennai (Division - 1)
TN O1 N 2414
🚍Depot: Alandhur
🚍Fleet_Code: ALG888
🚍SC: 78 Sitting + 10 Standing
🚍Chassis: Ashok Leyland - Titan
TNSTC Enthusiasts pic.twitter.com/hr5e6E3k3W
இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, தேசிய தூய காற்று திட்டத்தின்(NCAP) கீழ், ரூ.10 கோடி மதிப்பில் மத்திய அரசு 20 எலக்ட்ரிக் பேருந்துகளை ஒதுக்கியுள்ளது.
எந்த வழித்தடம்?
இந்த ஆண்டு இறுதிக்குள், இந்த பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
வார நாட்களில், அண்ணா சாலை, காமராஜர் சிலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் இயக்கவும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாவிற்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளின் நிர்வாகத்தை தனியார் ஒப்பந்த நிறுவனமும், வழித்தடம் மற்றும் கட்டண நிர்ணயத்தை அரசாங்கமும் மேற்கொள்ள உள்ளன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த மின்சார பேருந்துகள், 90 பயணிகள்அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |