இந்த கீரை இலையை ரசம் போல வைத்து சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள்!
முடக்காத்தான் கீரை மருத்துவ மூலிகை கீரையாகும். உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் இதற்கு முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் காரணம் ஏற்பட்டது முடக்கத்தான் கீரையானது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகின்றது.
வாய்வு
மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இலையை ரசம் போல வைத்துச் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள தேவையற்ற வாய்வு கலைந்து வெளியேறி விடும்.
மலச்சிக்கல்
சிறிது முடக்கற்றான் இலைகள், வெள்ளைப் பூண்டு ஐந்து, அரைத் தேக்கரண்டி அளவு மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். இதனால் வயிறு சுத்தமாகும், வயிற்று பூசிகள் அழியும், மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் தீரும்.
மூட்டு வலி
முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் காய்ச்சி, மூட்டு பகுதிகளில் வலியுள்ள இடங்களில் பூசினால் மூட்டு வலி உடனே நீங்கும்.
நாள்பட்ட இருமல் குணமாகும்
முடக்கற்றான் இலை மற்றும் வேர் இரண்டையும் குடிநீரில் இட்டு மூன்று வேளை அறுபது மில்லி வீதம் தொடர்ந்து சில நாட்கள் குடித்து வர நாள்பட்ட இருமல் சரியாகும்.