மூட்டு வழியை குணமாக்க உதவும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக வயதான பிறகு தான் மூட்டில் தேய்மானம் உண்டாகும் ஆனால் தற்போது இளம் வயதினரும் மூட்டு வலி பிரச்சினையால் பாதிப்படைகிறார்கள்.
எலும்பின் நடுவில் இருக்கும் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும்.
அந்தவகையில், மூட்டு வழியை குணமாக்க உதவும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முடவாட்டுக்கால் கிழங்கு- 100g
- இஞ்சி- 20g
- பூண்டு- 5 பல்
- பச்சை மிளகாய்- 1
- கறிவேப்பிலை- 1 கொத்து
- சீரகம்- ¾ ஸ்பூன்
- மிளகு- ¾ ஸ்பூன்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 2
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- கரம் மசாலா- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- மிளகு தூள்- ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் முடவாட்டுக்கால் கிழங்கை தோல் சீவி தண்ணீரில் இரண்டு முறை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகு போட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்ததாக குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு வறுத்து அதில் அரைத்த பேஸ்ட், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து இதில் தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவிட்டு 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
இறுதியாக மிளகு, கொத்தமல்லி தூவி கலந்துவிட்டால் ஆரோக்கியமான முடவாட்டுக்கால் கிழங்கு சூப் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |