முட்காட்டுப்பூ நூல் வெளியீட்டு விழா

By Yashini Nov 28, 2025 05:00 AM GMT
Report

முட்காட்டுப்பூ நூல்வெளியீடு

பேர்ன் - சுவிற்சர்லாந்து, 22.11.2025

“முட்காட்டுப்பூ” நூல் வெளியீட்டு விழா, 22. 11. 2025 மிகுந்த சிறப்புடன் பேர்ன் ஐரோப்பாத்திடலில் நிறைவு பெற்றது. 

நிகழ்ச்சியின் தொடக்கமாக நடைபெற்ற மங்கல விளக்கேற்றல், திருநிறை ஆதிலட்சுமி சிவகுமார், சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், சிவபசி. குழந்தை விக்னேஸ்வரன், திருமதி. நந்தினி முருகவேள், திருநிறை. பொன்னம்பலம் முருகவேள், திருமதி. ரதி கமலநாதன், திருமதி. சிவதர்சினி ராகவன், திருநிறை. து. திலக் (கிரி), திருநிறை. இராஜதுரை வசந்தன் ஆகியோரால் அழகுற நிறைவேற்றப்பட்டது.

முட்காட்டுப்பூ நூல் வெளியீட்டு விழா | Mudkaattupoo Nool Veliyeedu Function

அனைத்துப் மாவீரர்களையும், படுகொலை செய்யப்பட்ட மக்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூரும் அகவணக்கம் நடைபெற்றது.

மாவீரர் பொதுச்சுடரினை திருமதி அமலா சேரலாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து வருகை அளித்த அனைவரும் மாவீர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.

சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் வழங்கிய நல்லாசி வாழ்த்துரையும் நிகழ்விற்கு ஆன்மீகத் தொடுதலாக அமைந்தது. திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி வரவேற்புரையினையும் நிகழ்ச்சி அறிமுகத்தினையும் ஆற்றினார்.

முட்காட்டுப்பூ நூல் வெளியீட்டு விழா | Mudkaattupoo Nool Veliyeedu Function

நிகழ்வின் நடுவமாக நூல்வெளியீடு அமைந்தது, நூலாசிரியர் திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் நூலை வெளியிட:

* சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் – செந்தமிழ் அருட்சுனையர்

* சிவபசி. குழந்தை விக்னேஸ்வரன் – செந்தமிழ் அருட்சுனையர்

* திருநிறை. இராசதுரை வசந்தன் – தமிழர் களறி பெற்றுக்கொண்டனர்.  

தமிழ்நாட்டிலிருந்து பாவலர் அறிவுமதி ஐயா வெண்திரையில் ஒளிவீச்சாக வழங்கிய சிறப்புரை, திருமதி பிறேமினி அற்புதராசா வழங்கிய நயப்புரை, இளம் வாசகர்களின் நூல் வாசிப்புகள் - ஒவ்வொன்றும் நிகழ்வின் அழகையும் ஆழத்தையும் உயர்த்தின.

பின்னர் திரு. து. திலக் வழங்கிய சிறப்புரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நூலாசிரியர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் வழங்கிய உரை உள்ளங்களைத் தொற்றும் உணர்ச்சியுடன் நிறைந்திருந்தது.

முட்காட்டுப்பூ நூல் வெளியீட்டு விழா | Mudkaattupoo Nool Veliyeedu Function

அவரின் உரையின் உட்பொருள் இவ்வாறு அமைந்தது: இன்று எனது தந்தையின் நினைவுநாள், எதிர்பாராத விதமாக இன்று எனது நூல் இந்நளில் அவரது நினைவுகளோடு இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் எனக்கு ஒருவகையில் உளநிறைவு உண்டு, ஏனெனில் எனது தந்தையாரின் மொழிதான் எனது எழுத்தில் தவழ்ந்துகொண்டிருக்கின்றது. நான் 42 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

எங்கிருந்தாலும் எழுத்தை நான் கைவிட்டதில்லை. எப்படி உணவில்லாமல் இருக்கமுடியாதோ அப்படியே எழுதாமல் படிக்காமல் இருக்கமுடியாது. எழுத்தையும் வாசிப்பினையும் கைவிட்டால் நான் வெறும் சடமாகிப்போய்விடுவேன்.

ஆகவே நான் தொடரும் எனது எழுத்து, தாயகத்தில் இருந்தபோது பலரும் எனக்கு ஊட்டிய நம்பிக்கை, ஈடுபாடு, ஆறுதல், உற்சாகப்படுத்தல், தேசியத்தலைவரிடம் இருந்து கிடைத்த பரிசு – அவர் என் எழுத்தின்மீது இருந்த நம்பிக்கை, புலம்பெயர்ந்த பிறகு நான் சுவிஸ் நாட்டிற்கு வந்த பின்னர் நான் அடையாளம் கண்டுகொண்ட அல்லது என்னை அடையாளம் கண்டுகொண்ட தமிழர் களறியோடு நான் பொருந்திக்கொண்டேன்.

தமிழாலும் - தமிழினப்பற்றாலும் அந்த நெருக்கம் எங்களுக்குள் இன்னும் இன்னும் இறுகிக்கொண்டிருக்கின்றது. என்னுடைய மண் அதை நான் நிறைய நேசிக்கின்றேன். அந்த மண்ணிற்காக வாழ்ந்தவர்களை, வாழ்ந்துகொண்டிருப்பவர்களை நிறைய நேசிக்கின்றேன் அந்த வகையில் எனது எழுத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நூல் மிகவும் வரலாற்றிக்கு முக்கியம் என நினைக்கின்றேன். இந்நூலை நான் மூன்றாம் ஆளாக நின்று எழுதியபோது எழுத்து அந்நியப்பட்டிருந்தது. ஆகவே இதனை தன்நிலை எழுத்தாக மாற்றிக்கொண்டு எழுதினேன். அதன் பிறகு எழுத்து என்னை உணர்வுபூர்வமாக தொற்றிக்கொண்டது.

முட்காட்டுப்பூ நூல் வெளியீட்டு விழா | Mudkaattupoo Nool Veliyeedu Function

கதைகள் பிறக்கும் காரணங்கள் பல. போரின் நிழல்களிலும் தாய்மையின் வலியிலும் முளைத்த கதைகள், இதயத்தில் காயங்களை நினைவூட்டின. “முட்காட்டுப்பூ” நாவல், ஒரு தாயின் இழப்பு, துயரம், அன்பு, நினைவு, வரலாறு ஆகியவற்றை உள்ளம் உருகச் சொல்லிய படைப்பு.

எழுத்தின் வழி வரலாறை சந்திக்க வைத்த இந்த நூல் வெளியீடு, இன்றைய தலைமுறைக்கும் வருங்காலத்திற்கும் ஒரு முக்கியப் பங்களிப்பாகும். இந்நிகழ்வை சிறப்பாக முடிக்க உதவிய ஆசிரியர், பேச்சாளர்கள், செயல்பட்டவர்கள்,

இளம் வாசகர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிர் களறியின் சார்பாளராக திருநிறை. இன்பம் அருளையா ஆற்றி உளமார்ந்த நன்றி நவின்றார்.

இவ் வெளியீட்டு நிகழ்வு, இரவு உணவுடன் இனிதே நிறைவு பெற்றது.

முட்காட்டுப்பூ நூல் வெளியீட்டு விழா | Mudkaattupoo Nool Veliyeedu Function

முட்காட்டுப்பூ நூல் வெளியீட்டு விழா | Mudkaattupoo Nool Veliyeedu Function

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, கலிஃபோர்னியா, United States

22 Nov, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Markham, Canada

19 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US