Mudra Loan: ரூ.10 லட்சம் வரை எளிதாக கடன் பெறலாம்.. என்னென்ன வழிமுறைகள்
இந்திய அரசின் கடன் வழங்கும் முத்ரா திட்டத்தை பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
PMMY (Pradhan Mantri Mudra Yojana)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு 2015 -ம் ஆண்டில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, (PMMY) என்னும் திட்டதை அறிமுகம் செய்தது.
இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் வரை எளிதாக கடன் பெற முடியும்.
முத்ரா ஒரு மறுநிதியளிப்பு நிறுவனம் என்பதால் நேரடியாக கடன் வழங்காமல் வங்கிகள், பிற கடனளிப்பு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்க உதவுகிறது. அதாவது, சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கான நிதியை வங்கிகளுக்கு முத்ரா திட்டம் அளிக்கிறது.
3 விதமான கடன்கள்
* Shishu Mudra Loan - ரூ.50,000 வரை கடன் பெறலாம்.
* Kishor Mudra Loan - ரூ.50,000 -க்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்.
* Tarun Mudra Loan - ரூ.5 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.
யாரெல்லாம் கடன் பெறலாம்?
சிறு தயாரிப்பு ஆலைகள், சேவை வழங்குபவர்கள், கடைக்காரர்கள், காய்கறி, பழ வியாபாரிகள், உணவகங்கள், பழுது பார்க்கும் கடைகள், எந்திரம் இயக்குபவர்கள், கைவினைஞர்கள், உணவு பதப்படுத்துபவர்கள் இந்த திட்டத்தில் கடன் பெறலாம்.
இவர்களின் வணிகமானது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் அமைந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான விடயம் ஆகும்.
தகுதிகள் என்னென்ன?
* இந்த திட்டத்தில் கடன் பெறுபவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
* முந்தைய கடனை திருப்பி செலுத்தாதற்கான எந்த அறிக்கையும் கடன் வாங்குபவருக்கு இருக்க கூடாது.
* குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது வணிகம் நடந்து கொண்டு இருக்க வேண்டும்.
* 24 முதல் 70 வரையிலான தொழில்முனைவோர் விண்ணப்பிக்க முடியும்.
எப்படி விண்ணப்பிப்பது?
* www.udyamimitra.in என்ற இணையதளத்திற்கு சென்று 'Apply Now' என்பதை கிளிக் செய்யவும்.
* New Entrepreneur (புதிய தொழில் முனைவோர்) Existing Entrepreneur (தொழில்முனைவோர்), Self-Employed (சுய தொழில் செய்பவர்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.
* புதிய பதிவுகளுக்கு, விண்ணப்பதாரரின் பெயர், Email address மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
* இறுதியாக OTP உருவாக்கி பதிவு செயல் முறையை நிறைவு செய்யவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |