ரொனால்டோவிற்கு அடுத்து இவரா? 100 வெற்றிகளை பதிவு செய்த தாமஸ் முல்லர்!
சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் 100 வெற்றிகளைப் பதிவு செய்த மூன்றாவது நபர் என்ற சாதனையை தாமஸ் முல்லர் பெற்றுள்ளார். 115 மற்றும் 101 வெற்றிகளைப் பெற்றுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஐகர் கேசிலாஸ் ஆகியோருடன் இவர் இணைந்துள்ளார்.
தாமஸ் முல்லர்
தாமஸ் முல்லர் என்பவர் ஜேர்மனியின் தேசிய அணியில் விளையாடும் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். கால்பந்து விளையாட்டை பார்த்து ரசிப்பவர்களுக்கு தாமஸ் முல்லர் என்ற இந்த பெயர் மிகவும் பழக்கமாகியதாக இருக்கும்.
தேசிய அணிக்காக மட்டுமில்லாமல், கால்பந்து லீக் தொடர்களிலும் இவர் முக்கியப்பங்கு வகின்றார். கால்பந்து விளையாட்டில் அட்டாக்கிங் மிட்பீல்டராகவும், பார்வேர்டு வீரராக இருப்பவர் தாமஸ் முல்லர்.
மேற்கூறிய இரண்டு நிலைகளில் மட்டுமில்லாம் ஆட்டத்தின் சூழ்நிலை, எதிரணிக்கு ஏற்ப இரண்டாவது ஸ்டிரைக்கர், செண்ட்ரல் பார்வேர்டு, இரு புறம் இருக்கும் விங் பகுதிகளிலும் விளையாடும் திறன் படைத்த வீரராக இருந்து வருபவர் இவர் தான் எனலாம்.
ஜெர்மனி அணிக்காக இதுவரை 122 போட்டிகளில் களமிறங்கி 44 கோல்கள் அடித்துள்ளார். கடைசியாக இவர் 2022இல் இத்தாலிக்கு எதிரான போட்டியில் தனது 44வது கோல் அடித்தார்.
இந்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் 100 வெற்றிகளைப் பதிவு செய்த நபராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த விடயமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
100 வெற்றிகளைப் பெற்ற தாமஸ் முல்லர்
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஐகர் கேசிலாஸ் மட்டுமே இதைச் சாதித்தனர். அவரது அனைத்து வெற்றிகளையும் ஒரே கிளப்பில் கொண்டாடிய முதல் வீரராக அவரை கொண்டாட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
⭐ ??? ????? ?? ??? ??? ⭐
— FC Bayern München (@FCBayern) September 20, 2023
Als erst 3. Spieler knackt @esmuellert_ diese Marke. Unglaublich, herzlichen Glückwunsch, Thomas! ?#FCBMUN #MiaSanMia #FCBayern pic.twitter.com/rLgADBdmHK
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |