சர்வதேச போட்டிகளில் பந்துவீச இளம் வீரருக்கு தடை
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹஸ்னைன்(21) சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அவுஸ்திரேலிய பிக் பாஷ் டி20 லீக்கில் சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியின் போது முகமது ஹஸ்னைன் பந்துவீச்சு குறித்து புகார் அளிக்கப்பட்டது.
ஹஸ்னைன் சக்கிங் அடிப்பதாக சிட்னி சிக்ஸர்ஸ் அணி கேப்டன் Moises Henriques குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, ஹஸ்னைன் பந்து வீச்சு குறித்து நடுவர்கள் புகார் அளித்தனர், பின்னர் லாகூரில் ஹஸ்னைன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாகூரில் மேற்கொள்ளப்டப்ட பயோமெக்கானிக்கல் சோதனையில், ஹஸ்னைன் பவுலிங் சட்டவிரோதமானது என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச அவருக்கு தடை விதிக்கப்படுகிறது.
ஹஸ்னைனின் டெலிவரியில் அவர் தன் முழங்கை மடக்குவது என்பது தேவையான 15 டிகிரி வரம்பை மீறுவதாக இருக்கிறது.
ஐசிசி விதிகளின் படி, பந்து வீச்சாளர் முழங்கை 15 டிகிரிக்கு மேல் மடங்கினால், அது சட்டவிரோத பந்துவீச்சாக கருத்தப்படும்.
ஹஸ்னைன் தனது பந்து வீச்சு முறையை சரி செய்ய உதவ நிபுணர் ஒருவர் நியமிக்கப்படுவார் என பிசிபி அறிவத்துள்ளது.
மேலும், நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஹஸ்னைன்-க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.