ஒரே இன்னிங்சில் 16 சிக்ஸர்கள்! 82 பந்தில் 160 ஓட்டங்கள்.. ருத்ர தாண்டவம் ஆடிய கேப்டன்
ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் முகமது வசீம், சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 160 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.
நாணயசுழற்சியில் வென்ற அமீரகம்
நேபாளத்தில் சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் துடுப்பாட்டம் செய்து வருகிறது.
தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் முகமது வசீம் ருத்ர தாண்டவம் ஆடினார். அவரது துடுப்பாட்டத்தில் அனல் பறந்தது.
@CricketNep (Twitter)
ருத்ர தாண்டவம் ஆடிய கேப்டன்
சிங்கப்பூர் பந்துவீச்சாளர்களை வெகுவாக சோதித்த அவர் 16 சிக்ஸர்கள் விளாசினார். மொத்தம் 82 பந்துகளை எதிர்கொண்ட வசீம் 160 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
@CricketNep (Twitter)
மறுமுனையில் சதம் விளாசிய விக்கெட் கீப்பர் விரித்தியா அரவிந்த் 118 ஓட்டங்களுடனும், ஆயன் அப்ஸல் கான் 27 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
@CricketNep (Twitter)
ஐக்கிய அரபு அமீரக அணி இதுவரை 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 347 ஓட்டங்கள் குவித்துள்ளது.