டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்த முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி.., வைரலாகும் புகைப்படம்
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீடா அம்பானியும் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்துள்ளனர்.
சந்திப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில், டொனால்டு ட்ரம்ப் அமோகமாக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
அதேபோல், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உள்ளிட்ட பல தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்தவகையில், இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக இருவரும் நேற்று அமேரிக்கா சென்றனர்.
அங்கு துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் வாஷிங்டன் டிசியில் அளித்த விருந்தில் நேற்று இரவு இருவரும் பங்கேற்றனர்.
அப்போது அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்துப் பேசி வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்தியா-அமெரிக்கா உறவு இன்னும் ஆழமாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாக அம்பானி தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |