15000 கோடி மதிப்புள்ள அம்பானி வீட்டில் ஒரு ஏசி கூட இல்லை.., ஏன் தெரியுமா?
உலகளவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு எண்ணிலடங்கா தொழில்கள் இருக்கின்றன.
இவரது பிள்ளைகள், மனைவி நீடா அம்பானி என அனைவருமே பெரும் தொழிலதிபர்களாக இருக்கின்றனர்.
அம்பானி, தனது குடும்பத்தாருடன் மும்பையில் இருக்கும் கும்பலா மலையில் இருக்கும் அல்டமவுட்ன் சாலையில் இருக்கும் ஆண்டிலியா எனும் வீட்டில் தங்கியிருக்கிறார்.
உலகத்தரம் வாய்ந்த இந்த ஆன்டிலியா வீட்டில் மொத்தம் 27 கட்டடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இதில் உடற்பயிற்சி கூடங்கள், தனியார் தோட்டம், மொட்டை மாடி தோட்டம், பல தரப்பட்ட நீச்சல் குளங்கள், கோயில் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த வீட்டில் நிறைந்திருக்கின்றன.
இந்த வீட்டின் மொத்த மதிப்பு மட்டும் தற்போது ரூ.15000 கோடி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ஆடம்பர வீடான ஆண்டிலியாவில் ஏசியே இல்லை என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, எப்பொழுதும் அனைத்து வீடுகளுக்கு போடப்படும் ஏர் கண்டீஷனிங் இல்லையாம். காரணம், இந்த ஏசி மாட்டினால் வீட்டின் வெளிபுற அழகு கெட்டுவிடுமாம்.
அதனால், வீட்டின் மையத்தில் அதாவது central air conditioning இருக்குமாம். இந்த ஏசி இருப்பதால், வீட்டின் வெப்பநிலைக்கு ஏற்ப இந்த ஏசியின் குளிர்ச்சி மாறுபடுமாம்.
இந்த வீட்டில், பளிங்கு மற்றும் சில பூக்கள் இருப்பதால் இவற்றை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்க ஏசி இப்படி வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையும் சரியாக 300 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துவதாக சொல்லல்படுகிறது.
மொத்தமாக இந்த வீட்டிற்கு சராசரியாக 6,37,240 யூனிட் மின்சாரம் ஆவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |