இந்தியர்களை கேலி செய்த ChatGPT நிறுவனர்; சவாலை ஏற்ற கோடீஸ்வர தொழுலதிபர் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சவாலை ஏற்ற முகேஷ் அம்பானி
சாட்ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவை அவமானப்படுத்தி, சாட்ஜிபிடி போன்ற AI கருவியை இந்தியர்களால் உருவாக்க முடியாது என்று கூறினார். அப்படிச் செய்தால் நிச்சயம் தோல்வியடைவார்கள் என்று கூறினார்.
ஆனால் இப்போது முகேஷ் அம்பானி சாம் ஆல்ட்மேனின் பெருமையை உடைக்கப் போகிறார். சாம் ஆல்மேட்டனின் சவாலை முகேஷ் அம்பானி ஏற்றுக்கொண்டார்.
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஆண்டு பொதுக் கூட்டத்தில் AI குறித்து ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ இந்தியர்களுக்காக ஒரு புதிய AI அமைப்பை உருவாக்கும் என்றும், இது பயன்பாட்டில் உள்ள ChatGPTஐ ஒத்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அதன்படி AI அனைவருக்கும் மற்றும் எல்லா இடங்களிலும் அவர்களின் பக்கத்திலிருந்து கிடைக்கும் என்று ஜியோ கூறியுள்ளது.
கேலி செய்த ஆல்ட்மேன்
ஆல்ட்மேன் சமீபத்தில் ChatGPT பற்றி கூறி இந்தியர்களை அவமானபடுத்தும் விதமாக பேசினார். இந்தியர்கள் AI போன்ற கருவிகளை உருவாக்குவது குறித்து சந்தேகம் தெரிவித்த பிறகு சாம் ஆல்ட்மேன் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்தியாவுக்கு முழு ஆற்றல் உள்ளது
AI கருவிகளை உருவாக்க இந்தியாவிடம் முழு வலிமையும் தொழில்நுட்ப அறிவும் உள்ளது என்று முகேஷ் அம்பானி கூறினார். இந்தியாவில் AI அடிப்படையிலான தீர்வை உருவாக்கும் நோக்கில் Jio இயங்குதளங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதனால் இந்திய குடிமக்கள் மற்றும் வணிகங்கள் AI-ன் பலனைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார். இந்தியாவிற்கு திறன், தரவு மற்றும் திறமை உள்ளது என்று கூறினார்.
முகேஷ் அம்பானியின் வாக்குறுதி
முகேஷ் அம்பானி, சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஜியோ அனைவருக்கும் இணையம் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குவதாக உறுதியளித்தது. இன்று, ஜியோ அனைத்து இந்தியர்களுக்கும் AI இணைப்பை வழங்குவதாக உறுதியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mukesh Ambani, India, Sam Altman, creator of ChatGPT, Mukesh Ambani, 46th Reliance Annual General Meeting, Reliance Jio, AI technologies for India, Mukesh Ambani to introduce AI, rival of ChatGPT, jio to develop ChatGPT like AI system, AI system for india, reliance news