முகேஷ் அம்பானியின் சகோதரர்... சம்பளமே வாங்காமல் ரிலையன்சில் பணியாற்றுபவர் இவர் தான்
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி எதிர்கொண்ட பல இக்கட்டான சூழல்களில் அவருக்கு உதவிய சிலர் தற்போதும் அவருடனே இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
உடன்பிறவா சகோதரர்
முகேஷ் அம்பானியின் உடன்பிறவா சகோதரர் என அறியப்படும் ஆனந்த் ஜெயின் அப்படியான ஒருவர். பாடசாலை நாட்களில் இருந்தே இருவரும் நெருக்கமான நண்பர்கள். தமது உடன்பிறவா சகோதரர் என்றே ஆனந்த் ஜெயினை எப்போதும் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்து வைக்கிறார்.
25 ஆண்டுகளாக முகேஷ் அம்பானியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் ஆனந்த் ஜெயின். ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். ரிலையன்ஸ் குழும நிறுவனமான இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்திலும் ஆனந்த் ஜெயின் பணியாற்றியுள்ளார்.
வெளியான தகவல்களின் அடிப்படையில், முகேஷ் அம்பானியின் முக்கிய ஆலோசகராக ஆனந்த் ஜெயின் உள்ளார். அத்துடன் அனைத்து முக்கியமான விடயங்களிலும் அவரிடம் முகேஷ் அம்பானி ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
ஆனந்த் ஜெயின் சொந்தமாக தொழில் தொடங்கி 2007 காலகட்டத்தில் இந்தியாவின் 40 பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருந்தார். ஆனால் முகேஷ் அம்பானியின் கோரிக்கையை ஏற்று ரிலையன்ஸ் குழுமத்தின் பணியாற்ற இணைந்த பின்னர், அவர் சம்பளம் எதுவும் பெறவில்லை என்றே கூறப்படுகிறது.
Dream 11 நிறுவனம்
மேலும், முகேஷ் அம்பானியின் கட்டுமான நிறுவன தொழிலின் மூளையாக செயல்பட்டவர் ஆனந்த் ஜெயின் என்றே கூறப்படுகிறது. ஜெய் கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் ஜெயின் பல வணிகங்களில் ஈடுபட்டு சுமார் 30 வருட அனுபவம் பெற்றவர்.
முகேஷ் அம்பானியும் ஆனந்த் ஜெயினும் மும்பை ஹில் கிரேஞ்ச் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். முகேஷ் அம்பானி 1981ல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வி முடித்து திரும்பிய பின்னர், ஆனந்த் ஜெயின் டெல்லியில் உள்ள தனது வணிக செயற்பாடுகளை விட்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.
ஆனந்த் ஜெயினின் மகன் தான் பெரும்பாலான இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான Dream 11 நிறுவனத்தின் இணை நிறுவனர். அந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 65,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |