மிட்டாய் விற்க ரூ.27 கோடிக்கு ஒப்பந்தம்.! முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி எடுத்த முடிவு
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி புதிய முயற்சியாக குழந்தைகளின் விருப்பமான மிட்டாய் விற்பனையில் களமிறங்கியுள்ளார்.
மிட்டாய் விற்பனையில் முகேஷ் அம்பானி
தொலைத்தொடர்பு, எரிசக்தி, மற்றும் சில்லறை விற்பனை துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இப்போது மிட்டாய் உலகத்திலும் தனது முத்திரையை பதிக்கப் போகிறது.
ரிலையன்ஸ் ரீடைலின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), ரவல்கான் சர்க்கரை பண்ணையின் (Ravalgaon Sugar Farm) பிரபலமான மிட்டாய் பிராண்ட்களை சுமார் ரூ.27 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் மிட்டாய் சந்தையில் ரிலையன்ஸ் நுழைவதை குறிக்கிறது.
ஆச்சரியமான ஒப்பந்தம்
Ravalgaon Sugar Farm நிறுவனத்தின் வரலாற்று சிறப்புமிக்க மிட்டாய் பிராண்டுகளான மாங்கோ மூட், காஃபி பிரேக், துட்டி ஃப்ரூட்டி, பான் பசந்த், சாக்லேட் கிரீம்,(Mango Mood, Coffee Break, Tutty Fruity, Paan Pasand, Choco Cream Supreme) மற்றும் சுப்ரீம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
இவை அனைத்தும் பல தலைமுறைகளாக மக்கள் மனதில் இடம்பிடித்த பாரம்பரிய சுவைகள். இதன் மூலம், ரிலையன்ஸ் அனுபவம் வாய்ந்த பிராண்டுகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி தனது சந்தை பங்கை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸின் திட்டம் என்ன?
ரிலையன்ஸ் இந்த பிராண்டுகளை எப்படி மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், நிபுணர்கள் சில கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
ரிலையன்ஸ் தனது பரந்த விநியோக மற்றும் சந்தைப்படுத்தல் அனுபவத்தைப் பயன்படுத்தி இந்த பாரம்பரிய பிராண்டுகளை மறுசீரமைத்து, புதிய தலைமுறைகளையும் கவரக் திட்டமிட்டுள்ளது.
அத்துடன் இவற்றை ரிலையன்ஸ் ரீடைல் கடைகளில் விற்பனை செய்வதன் மூலம் இதற்கான வாடிக்கையாளர்களை அதிகரிக்கலாம்.
சவால்கள் மற்றும் எதிர்காலம்
இந்திய மிட்டாய் சந்தை மிகவும் போட்டி மிக்கது. பார்லே, ஹெட்டி மற்றும் ஐடிசி போன்ற நிறுவனங்கள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் லையன்ஸ் இந்த பிராண்டுகளை வெற்றிகரமாக மறுசீரமைத்து போட்டியில் வெல்ல முடியுமா என்பது இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த இனிமையான ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பன்முகப்படுத்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒரு முக்கிய படி என்பது உறுதி.
உற்பத்தியில் நீடிக்கும் Ravalgaon Sugar Farm
Ravalgaon Sugar Farm நிறுவனம் பிரபலமான பிராண்ட் மிட்டாய்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தில் வழங்கி இருந்தாலும், ஒப்பந்த பரிவர்த்தனை நிறைவடைந்த பிறகு நிறுவனத்தின் சொத்து, நிலம், ஆலை, கட்டிடம், உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை Ravalgaon தொடர்ந்து தன் பொறுப்பில் வைத்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |