இந்தியாவிலேயே முதல்முறையாக Boeing 737 MAX 9 விமானத்தை வாங்கிய தொழிலதிபர்
ஏற்கனவே 9 விமானங்களை சொந்தமாகக் கொண்டுள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக போயிங் விமானம் ஒன்றை வாங்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக
ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தனது சொகுசு வாழ்க்கை மற்றும் ஆடம்பர செலவுகளுக்காக பெயர் பெற்றவர். தனது பிள்ளைகள் மூவரின் திருமண விழாவும் பல நாட்கள் நீண்ட கலை நிகழ்ச்சிகளுடன் நடத்தப்பட்டது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக லண்டன் உள்ளிட்ட நகரங்களிலும் குடியிருப்புகள் மற்றும் சொத்துக்கள் உள்ளன. அத்துடன் அவருக்கு சொந்தமாக விமானங்களும் ஹெலிகொப்டரும் உள்ளன.
ஏற்கனவே சொந்த தேவைகளுக்காக 9 விமானங்களை சொந்தமாக வைத்துள்ள முகேஷ் அம்பானி, தற்போது இந்தியாவிலேயே முதல் முறையாக போயிங் நிறுவனத்தின் 737 MAX 9 விமானத்தை வாங்கியுள்ளார்.
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் வைத்திருக்கும் விமானங்களில் மிகவும் விலை உயர்ந்தது மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் சிறந்தது என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் தான் சோதனை ஓட்டம் மற்றும் விரிவான மாற்றங்கள் செய்யப்பட்டு முகேஷ் அம்பானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரூ 1,000 கோடிக்கும் அதிகமாக
சுவிட்சர்லாந்தில் 2023 ஏப்ரல் மாதம் முதல் சோதனை ஓட்டம் மற்றும் தொடர்புடைய அனைத்தும் விரிவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லியில் தரையிறங்கும் முன்னர் பாஸல், ஜெனிவா மற்றும் லண்டன் விமான நிலையங்களில் 6 முறை சோதனை ஓட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆகஸ்டு 27ம் திகதி பாஸல் நகரில் இருந்து புறப்பட்டு 9 மணி நேரத்தில் சுமார் 6,234 கி.மீ கடந்து டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. தற்போது டெல்லி விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் மும்பை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் 737 MAX 9 விமானத்தின் அடிப்படை விலை என்பது 118.5 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. ஆனால் முகேஷ் அம்பானி குடும்பம் அந்த விமானத்தில் தனிப்பட்ட மாற்றங்கள் பல செய்துள்ளதால் செலவிட்டுள்ள தொகை ரூ 1,000 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |