பிரதமர் மோடியை “அவதார புருஷர்” என்று வாழ்த்திய முகேஷ் அம்பானி: வைரல் பதிவு
இந்திய பிரதமர் மோடியை “அவதார புருஷர்” என்று முகேஷ் அம்பானி பாராட்டி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
மோடி ஒரு “அவதார புருஷர்”
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி இந்திய பிரதமர் மோடியை “அவதார புருஷர்” என பாராட்டியுள்ளார்.
" Avatar purush " paka Amit Malviya ne likh ke di hogi isko ye script 🤣🤣 https://t.co/h6lbdrzt0k pic.twitter.com/C5Poiw4mqh
— Azy (@Azycontroll_) September 17, 2025
மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியாவை வழிநடத்த கடவுளால் அனுப்பப்பட்ட “அவதார புருஷர்” என்று முகேஷ் அம்பானி பாராட்டியுள்ளார்.
மேலும் மோடியின் பிறந்த நாள் இந்தியாவின் 1.45 பில்லியன் இந்தியர்களுக்கும் பண்டிகை நாள் என்றும், பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர இந்தியா தனது 100 வது ஆண்டை கொண்டாடும் போதும் பிரதமர் மோடி நாட்டை வழிநடத்துவார் என்று முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை இந்தியாவின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தலைவர் என்றும், இதுவரை நாட்டிற்காக சோர்வின்றி உழைக்கும் ஒரு தலைவரை நான் பார்த்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |