ரிலையன்ஸ் இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் பிள்ளைகள் மூவர் பெறும் சம்பளம் எவ்வளவு?
ரிலையன்ஸ் நிறுவனங்களின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் முகேஷ் அம்பானியின் பிள்ளைகள் மூவரும் பெறும் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெருந்தொகை சம்பளமாக
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரும், உலக கோடீஸ்வரர்களில் 9வது இடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானி, எதிர்காலம் கருதி தமது பிள்ளைகள் மூவருக்கும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் உரிய பங்கை பகிர்ந்தளித்துள்ளார்.
இதனால் அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக உள்ளனர். பொதுவாக இவ்வாறான பொறுப்பில் இருப்பவர்களுக்கு பெருந்தொகை சம்பளமாக வழங்கப்படும். அதற்கு மாறாக மூவருக்கும் சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
பதிலுக்கு, அவர்களின் தாயார் நீதா அம்பானிக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் போன்று, இஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் அம்பானிக்கும் வழங்கப்படுகிறது. 2014ல் நிர்வாகக் குழு உறுப்பினராக நீதா அம்பானி இணைந்துள்ளார்.
அம்பானியின் மூன்று பிள்ளைகளுக்கும்
ஒவ்வொரு கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு ரூ 6 லட்சம் கட்டணமாக வழங்கப்படுகிறது. அத்துடன் ஆண்டுக்கு ரூ.2 கோடி லாப அடிப்படையிலான கமிஷனும் வழங்கப்படுகிறது.
இதேப் போன்றே முகேஷ் அம்பானியின் மூன்று பிள்ளைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நிர்வாக குழுவில் இருந்து நீதா அம்பானி விலகியிருந்தாலும், நிர்வாக கூட்டங்களில் அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2020 முதல் முகேஷ் அம்பானி தனக்கான சம்பளத்தை கைவிட்டுள்ளதாகவும், அதையே தற்போதும் பின்பற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |