முகேஷ் அம்பானியின் சம்மந்தி யார் தெரியுமா? அவர் வீட்டு மருமகளாகும் ராதிகா குறித்த சுவாரசிய தகவல்கள்
முகேஷ் அம்பானி வீட்டுக்கு மருமகளாக வரப்போகும் ராதிகா மெர்ச்சண்ட் குறித்து யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி (சொத்து மதிப்பு ரூ. 7.15 லட்சம் கோடி) இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டுக்கும் ராஜஸ்தானில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பரத நாட்டியம்
Encore Healthcare நிறுவனத்தின் சிஇஒ விருப் மெர்ச்சண்ட் - ஷைலா தம்பதியின் மகள் தான் ராதிகா மெர்ச்சண்ட். நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ராதிகா Encore Healthcareன் இயக்குனராக உள்ளார்.
Twitter/@CNBCTV18News
சொத்து மதிப்பு
பரத நாட்டியத்தின்மீது தீராத ஆர்வம் கொண்ட ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக குரு பாவனா என்பவரிடம் பயிற்சி எடுத்தார். நடன பயிற்சி முடிந்தவுடன் ராதிகாவின் அரங்கேற்றம் கடந்த ஜூன் மாதம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
ராதிகாவின் பெற்றோர், முகேஷ் அம்பானி அவரது மனைவி நீடாவும் சேர்ந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். பரதநாட்டியம் மட்டுமின்றி, மலையேற்றம், நீச்சல் போன்றவற்றிலும் அவருக்கு ஆர்வம் உண்டு.
ராதிகா தந்தை விருப் சொத்து மதிப்பு ரூ. 755 கோடிக்கு மேல் இருக்கும், ராதிகாவில் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 8 கோடி என தெரியவந்துள்ளது.
herzindagi