முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் மாத சம்பளம்... இந்தியாவில் பல CEOக்களின் கனவு
ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி ரூ 23088 கோடி சொத்டு மதிப்பைக் கொண்டுள்ளார். தற்போது தமது பிள்ளைகள் மூவரையும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதன்மையான பொறுப்புகளுக்கு கொண்டு வந்துள்ளார்.
அதிகார மையமாக
இதில், முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் ஒரே மகளான இஷா அம்பானி தனக்கென ஒரு அதிகார மையமாக உருவெடுத்துள்ளார். மட்டுமின்றி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மிக முக்கியமான பிரிவுகளில் ஒன்றின் தலைமைப் பொறுப்பை முன்னெடுத்து வருகிறார்.
33 வயதான இஷா தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் செயல் இயக்குநராக பொறுப்பில் உள்ளார். 2006ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது உலக அரங்கில் கணக்கிடக்கூடிய சக்தியாக உருவாகுவதில் ஈஷா முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ரிலையன்ஸ் ரீடெய்ல்
மாதந்தோறும் ரூ 35 லட்சம் ஊதியமாகப் பெறும் இஷா, சலுகைகளுடன் ஆண்டுக்கு ரூ 4.2 கோடி சம்பளமாகப் பெறுகிறார். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனமே ரூ 8.36 லட்சம் கோடி மதிப்பீட்டைக் கொண்டுள்ளது,
இது இந்தியாவின் முதல் நான்கு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இஷா பொறுப்பேற்றதன் பின்னர் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் நாடு முழுவதும் 18,500 கடைகளை திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |